எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தென்காசிக்கு புறப்பட்டார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தென்காசியில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

Update: 2022-12-07 15:16 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார்.

இந்த ரெயில் நாளை காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடையும்.

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதன்முறையாக இப்போதுதான் ரெயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்-அமைச்சரின் பயணத்திற்காக பொதிகை ரெயிலில் சலூன் (சொகுசு) பெட்டி இணைக்கப்படுகிறது.

இதில் சொகுசு ஓட்டலில் உள்ளதுபோல் பல்வேறு வசதிகள் உண்டு. இந்திய ரெயில்வே நிர்வாகத்தின் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்-அமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக 'சலூன்' என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை உருவாக்கி உள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்