வேளச்சேரியில் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
சென்னை,
கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நீண்டகாலமாக கட்டப்பட்டு வந்த தரமணி - வேளச்சேரி விரைவு சாலையில் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து தற்போது வேளச்சேரி- தாம்பரம் விரைவு சாலை வழியாக இரண்டாம் கட்ட பாதை கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. மேம்பாலத்தில் மாநகராட்சி சார்பில் 45 லட்சம் ரூபாய் செலவில் 82 கம்பங்கள் நட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தார். இந்த மேம்பாலத்தின் முலம் வேளச்சேரி விஜயநகர் சந்திப்பு, தண்டீஸ்வரம் நகர், காந்தி சாலை பகுதியில் வாகன நெரிசல் குறையும் என கூறப்படுகிறது.