பெண் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி

வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி நடந்தது.

Update: 2023-06-15 17:51 GMT

வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 2-ம் நிலை பெண் காவலர்கள் 283 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு முதலுதவி குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் முன்னிலை வகித்தார். உதவி சட்ட போதகர்கள் மோகன், ரகுபதி ஆகியோர் சட்ட நுணுக்கங்கள் குறித்து விளக்கி கூறினர்.

முதலுதவி பயிற்சி முகாம் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், விரிவுரையாளர்கள் முருகேசன், பழனி ஆகியோர் பெண் காவலர்களுக்கு முதலுதவி குறித்து விளக்கி கூறினர். அப்போது ஒருவர் மயக்க நிலையில் இருந்தால் எப்படி முதலுதவி அளிப்பது, செயற்கை சுவாசம் அளிக்கும் முறை, எலும்பு முறிவு ஏற்பட்டால் கட்டுப் போடும் முறைகள், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து செயல் முறை விளக்கத்தை பொம்மையின் மூலம் எடுத்துக் கூறினர்.

இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக சப்-இன்ஸ்பெக்டர் விருசபதாஸ் செய்திருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்