போலீசாருக்கு முதலுதவி பயிற்சி முகாம்

போலீசாருக்கு முதலுதவி பயிற்சி முகாம்

Update: 2022-12-12 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடியில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ கழக கே.எம்.சி. கிளையின் செயலாளர் டாக்டர் குமரேசன் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, எப்பகுதியில் எவ்வித விபத்துக்கள் நேர்ந்தாலும் முதலில் அழைப்பது போலீசாரைத் தான். எனவே போலீசாருக்கு முறையான முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி அளித்தால் அவர்களால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். அதற்காகவே இப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் முறை, அவர்களுக்கு அளிக்க வேண்டிய உடனடி முதலுதவி சிகிச்சை ஆகியவற்றை இதுகுறித்து பயிற்சி பெற்ற போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபின் எளிதில் குணம் அடைய வாய்ப்புகள் அதிகம் என்றார். முகாமில் டாக்டர்கள் கோகுல கிருஷ்ணன், பெனித் ராஜ், அமலன் ஆகியோர் கலந்துகொண்டு, விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கு முதலுதவி சிகிச்சைகள் அளிப்பது எப்படி என்பது குறித்தும் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்