கமுதி மாணவி கல்விமாவட்ட அளவில் முதலிடம்

கமுதி மாணவி கல்விமாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.;

Update:2022-08-01 22:57 IST

கமுதி, 

கமுதியில் ரகுமானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சுபத்தெரலின். இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 478 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில் மாணவி சுபத்தெரலின் அவரது தேர்வு விடைத்தாளை மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து இருந்தார். மறுகூட்டலுக்குபின் 13 மதிப்பெண்கள் அவர் அதிகம் பெற்றார். இதையடுத்து மொத்தம் 491 மதிப்பெண்கள் பெற்று பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மாணவியை வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்