"மாண்டஸ்" புயலை எதிர்கொள்ள உடுமலையில் தீயணைப்பு துறையினர் தயார்

"மாண்டஸ்" புயலை எதிர்கொள்ள உடுமலையில் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Update: 2022-12-08 17:36 GMT

"மாண்டஸ்" புயலை எதிர்கொள்ள உடுமலையில் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் உருவாகும் "மாண்டஸ்" புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்த புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கான முன்ெனச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை இயக்குனர் பி.கே.ரவி, மேற்கு மண்டல இணை இயக்குனர் சத்தியநாராயணன் ஆகியோர் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட அலுவலர் காங்கேயபூபதி, உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் ஆலோசனைப்படி உடுமலையில் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தயார் நிலையில்

இதற்காக ரப்பர் படகு, கயிறு, மரம் வெட்டும் அரவை எந்திரம், மிதவைப்பம்பு, அக்ஸா லைட், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட மீட்பு பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைக்கு 04252-223039, 9445086323 மற்றும் 112 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்