குன்னூர் அருகே மரத்தில் பற்றி எரிந்த தீ-தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
குன்னூர் அருகே மரத்தில் பற்றி எரிந்த தீ-தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
குன்னூர்
குன்னூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தற்போது பகல் வேளையில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. வெயிலோடு வறட்சியான காற்று வீசி வருகிறது. குன்னூர்- கோத்தகிரி சாலையிலுள்ள வண்டி சோலையிலிருந்து பாரன்ட்டேல் வழியாக ராணுவ கல்லூரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருப்புறங்களிலும் உள்ள வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. நேற்று முன்தினம் மாலை திடீரென்று ஒரு மரத்தில் தீப்பிடித்தது இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினரும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மரத்தில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். தக்க சமயத்தல் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.