வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்
வீட்டில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள அருண்பிரசாத் என்பவரது வீட்டின் கொட்டகையில் பாம்பு புகுந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் செந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கொட்டகையில் பதுங்கி இருந்த 6 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.