பதுக்கி வைத்த ரூ.1½ லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசியில் பதுக்கி வைத்த ரூ.1½ லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-24 19:45 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் பாரைப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் தகரசெட்டில் எவ்வித அனுமதியும் இன்றி 45 அட்டை பெட்டிகளில் ரூ.1,57,500 மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் கடையில் இருந்த ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்