வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்

கம்பத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-08-03 20:00 GMT

கம்பம் 19-வது வார்டு பாரதியார் நகர் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 42). இவரது வீட்டில் நேற்று மதியம் பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து அப்பகுதி மக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருப்பதி வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் மூட்டை மூட்டையாக பட்டாசுகள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த பட்டாசு மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், கம்பம்மெட்டுச் சாலையில் அனுமதி பெற்று பட்டாசு விற்பனை கடை நடத்தி வருவதாகவும், விற்பனைக்கு வாங்கிய பட்டாசுகளை கடையில் வைக்க இடம் இல்லாததால் வீட்டில் வைத்திருந்ததாக கூறினார். அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்