ஏழாயிரம்பண்ணையில் பட்டாசுகள் பறிமுதல்
ஏழாயிரம்பண்ணையில் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏழாயிரம் பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராஹிம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரிசல்பட்டி, இ.ரெட்டியபட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரிசல்பட்டி காட்டு பகுதியில் தகரசெட் அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சாத்தூர் நந்தவனப்பட்டி தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 33) என்பவரிடம் இருந்த பேன்சி ரக பட்டாசுகள் 3 பண்டல்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் அதே பகுதியில் செல்லத்துரை (27) என்பவரிடம் இருந்து 4 பண்டல்களில் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு செல்லத்துரையை கைது செய்தனர். தாயில்பட்டி அருகில் உள்ள தெற்குஆணை குட்டம், அரசரடி, வெற்றிலையூரணி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் நடத்திய சோதனையில் தெற்கு ஆணைகுட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த நாராயணசாமி ( 68) என்பவரிடம் இருந்து 30 கிலோ சோல்சா பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்.