தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதால், தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பட்டாசு வெடித்து..
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் இருநீதிபதிகள் அமர்வு, முந்தைய தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லும் என்ற தீர்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி பழைய பஸ்நிலையம், சிவன்கோவில் தேரடி முன்பும் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் அ.தி.மு.க.அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரி
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு அறிவித்ததை தொடர்ந்து ஆழ்வார் திருநகரியில் உள்ள காமராஜர் சிலை அருகில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்