வாகனம் மோதி பட்டாசு தொழிலாளி பலி

வாகனம் மோதி பட்டாசு தொழிலாளி பலி

Update: 2023-01-05 18:38 GMT

சிவகாசி

கீழத்திருத்தங்கல் பகுதியை சேர்ந்த முனியசாமி என்கிற பால்கண்ணன் (வயது 35). பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் சென்ற போது அங்கு வந்த சரக்கு வாகனம் முனியசாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி முனீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் சரக்கு வாகன டிரைவர் எஸ்.என்.புரம் ரோட்டை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மீது கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்தவர் பிரசாந்த் (23). இவர் முனீஸ்வரன் காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பிரசாந்த் மீது மோதியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து கிழக்கு போலீசார் முருகன் காலனியை சக்திகணேஷ் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்