சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; அறை தரைமட்டம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; அறை தரைமட்டம்

Update: 2023-06-09 18:45 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமானது.

பட்டாசு ஆலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் கிராமத்தில் ஆறுமுகசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள நிலையில் நேற்று 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு இருந்தனர்.

பகல் 11 மணி அளவில் அறை எண் 44-ல் தொழிலாளர்கள் மருந்து கலவையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரசாயன கலவையில் மாற்றம் ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அறை வெடித்துச்சிதறி தரைமட்டமானது.

மருந்து கலவையில் மாற்றம் இருந்ததை அறிந்தவுடன் ெதாழிலாளர்கள் அறையில் இருந்து வெளியே ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வெடி விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக்கூறப்படுகிறது.

சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிவகாசி கிழக்கு போலீசாரும், தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள் ஆய்வு தனி தாசில்தார் ஸ்ரீதரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

4 பேர் மீது வழக்கு பதிவு

இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து அனுப்பன்குளம் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் உரிமையாளர் ஆறுமுகசாமி, மேனேஜர் கணேசன், போர்மென்கள் முத்துப்பாண்டி, ராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்