விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்து காயமடைந்த வாலிபர் சாவு

விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்து காயமடைந்த வாலிபர் உயிரிழந்தாா்.

Update: 2022-06-21 14:31 GMT


செஞ்சி, 

விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்தவர் துரை. இவர் பட்டாசு உரிமம் பெற்று அதே ஊரில் பட்டாசு தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு துரையின் மகன் முருகன்(வயது 28) தாங்கள் செய்து வைத்திருந்த பட்டாசுகளில் மாதிரி ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்து, வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் வெடிக்க வைத்துள்ளார்.

அப்போது பட்டாசு வெடித்து முருகன் மீது விழுந்தது.இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து சித்தேரி கிராம நிர்வாக அலுவலர் ஷக்கினா ஜெயபாக்கியவதி கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்