தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு

தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-07-07 00:16 IST

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதி சத்யா நகரில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 93 வீடுகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஐகோர்ட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட அல்லிக் கண்மாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இந்த பகுதியினரை காலி செய்ய வைக்கும் விதமாக முதலில் மின்இணைப்பினை துண்டிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை மின்வாரியத்தினர் மூலம் அதிகாரிகள் மின் இணைப்பினை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மின் கம்பத்தை முற்றுகையிட்டனர். அப்போது திடீரென்று 3 பெண்கள் மண்எண்ணெய் கேனை எடுத்து தங்களின் உடலில் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்