குமராட்சி அருகே தர்மராஜர் கோவிலில் தீமிதி திருவிழா

குமராட்சி அருகே தர்மராஜர் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-06-18 16:31 GMT


காட்டுமன்னார்கோவில், 

குமராட்சி அருகே எள்ளேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தர்மராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 36-வது ஆண்டு தீ மிதிதிருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் நேற்று முன்தினம் தீ மிதி திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி பக்தர்கள் பால்குடம், கா வடி மற்றும் செடல் குத்தி வந்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, தர்மராஜர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர், கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில், பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், தர்மராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்