தபால் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
பழனியில், தபால் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி நடந்தது.
பழனி தீயணைப்பு நிலையம் சார்பில், தபால் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி நேற்று நடைபெற்றது. நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் தீயணைக்கும் கருவியை கொண்டு தீயை அணைப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது போன்றவை குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தனர். இதில் தபால் நிலைய பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறும்போது, கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பழனி தீயணைப்பு நிலையம் சார்பில் கோவில், பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்களில் தீத்தடுப்பு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பழனி முருகன் கோவில், தனியார் பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. வரும் நாட்களில் அரசு நிறுவனங்கள், தனியார் ஆலைகளில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது என்றனர்.