வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி முகாம்
வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.
அணைக்கட்டு
வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.
அணைக்கட்டு தாலுகா வெட்டுவானத்தில் உள்ள எல்லை அம்மன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையிலான வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் இடிபாடுகள் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்கள் காயமடைந்தால் அவர்களை எவ்வாறு மீட்டு முதல் உதவி அளிப்பது என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர் இந்த பயிற்சியில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, மேலாளர் சரவண பாபு மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.