ரெயில் நிலைய மேம்பால நடைமேடை கூரையில் தீ

அரக்கோணம் ரெயில் நிலைய மேம்பால நடைமேடை கூரையில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-06-21 18:44 GMT

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, காட்பாடி மற்றும் வெளி மாநிலங்களுக்கு நாள்தோறும் வேலைக்கு செல்பவர்கள், பொது மக்கள் என ஆயிரக் கணக்கானோர் பயணிக்கின்றனர். இந்தநிலையில் அரக்கோணம் ரெயில் நிலையம் வடக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பால நடை மேடையின் மேற்கூரையில் நேற்று இரவு திடீரென தீ பிடித்து எரிந்தது. அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்து ரெயில்வே அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்தனர். தொடர்ந்து இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் மின் விளக்குக்கு செல்லும் ஒயரில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த தீ விபத்தால் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. திடீரென நடைமேடை மேற்கூரை பகுதியில் ஏற்பட்ட தீயால் பயணிகளிடமும், அந்த பகுதியிலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்