திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் தீப்பிடித்து எரிந்த கார்

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் கார் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2023-04-21 20:45 GMT

திண்டுக்கல் மேட்டுப்பட்டி 11-வது தெருவை சேர்ந்தவர் கிளின்டன். இவர் சொந்தமாக கார் வைத்து, அதனை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்தநிலையில் நேற்று கிளின்டன் தனது காரை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் அவருடைய காரில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கிளின்டனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்ப்பதற்குள் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது.

உடனே திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜூ தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் முன்பகுதி தீயில் எரிந்து நாசமானது. விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், கார் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்