கள்ளக்குறிச்சியில் தீ விபத்து; கொத்தனார் காயம்

கள்ளக்குறிச்சியில் நடந்த தீ விபத்தில் கொத்தனார் காயமடைந்தார்.

Update: 2022-11-22 18:45 GMT

கள்ளக்குறிச்சி மேட்டு தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் கொடியரசு (வயது 30). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி் கே.பி.ஆர். நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் சாரம் கட்டி பூசும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் அருகே சென்ற மின்கம்பிகள் காற்றில் ஒன்றோடு ஒன்று உரசியதில், கட்டிடத்தை மறைக்க கட்டப்பட்டிருந்த துணிகள் தீப்பற்றி எரிந்தது. மேலும் தீயுடன் எரிந்த துணி கொடியரசு மீது விழுந்தது. இதில் தீக்காயமடைந்து மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்