தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-07-10 16:34 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி அருகே ஆலாம்பாளையத்தில் தனியார் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தொழிற்சாலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் (பொறுப்பு) தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தீ விபத்தில் காயர் பேல்கள், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பொக்லைன் எந்திரம், டிராக்டர் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து நெகமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்