இரும்பு குடோனில் தீ விபத்து

சேலம் பள்ளப்பட்டியில் இரும்பு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் வேன் எரிந்து நாசம் ஆனது.;

Update: 2023-01-22 19:30 GMT

சேலம் பள்ளப்பட்டியில் இரும்பு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் வேன் எரிந்து நாசம் ஆனது.

பழைய இரும்பு குடோன்

சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சற்குணம். இவர் ஆலமரத்துக்காடு பகுதியில் பழைய இரும்பு விற்பனை செய்யும் குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு குடோனை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று அதிகாலை அந்த குடோனில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ பிடித்து எரியத்தொடங்கியது. இதை அந்த வழியாக சென்றவர்கள் சற்குணத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் குடோனுக்கு வந்தார்.

தீயை அணைத்தனர்

இது குறித்து அவர் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் எரிந்து சோதம் அடைந்தது.

மேலும் குடோனில் இருந்த ஷேர் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து நாசனமானது. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்