அரிசி ஆலையில் தீ விபத்து
திண்டிவனம் அருகே அரிசி ஆலையில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் சேதம்
திண்டிவனம்
திண்டிவனம் அருகே இடையான்குளம் கிராமத்தில் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் எஸ் பிராண்டு அரிசி ஆலை உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது நெல்லை வேக வைக்கும் டிரையர் எந்திரம் திடீரென தீப்பிடித்து நெல்லுடன் சேர்ந்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் நெல் அவிக்கும் எந்திரம் மற்றும் நெல் சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.