தீத்தடுப்பு செயல்விளக்க பயிற்சி

கச்சிராயப்பாளையத்தில் தீத்தடுப்பு செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-07-19 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு குறித்த செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆலையில் தீ் விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைக்க வேண்டும். தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது பற்றி தொழிலாளர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் முருகேசன், மேலாளர் ராம்குமார், தலைமை துணை பொறியாளர் சக்திவேல், தொழிலாளர் நல அலுவலர் ஜெயக்குமார், தலைமை ரசாயன பிரிவு திருமாவளவன், கணக்கு அலுவலர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்