கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து

கலவையில் கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வீடு எரிந்தது.

Update: 2023-05-16 18:58 GMT

கலவையை சேர்ந்தவர் முத்துக்கருப்பன். அவரது மனைவி சூர்யா, மகள் நிர்மலா ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டில் சமையல் செய்வதற்கு கியாஸ் சிலிண்டரை நிர்மலா பற்ற வைத்துள்ளார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு தீபிடித்துள்ளது. இதில் ஓட்டு வீட்டின் கூரையும் தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. மண்டல துணை தாசில்தார் தேவராஜ், வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், கிராம அதிகாரி தீனதயளன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, அரிசி, துணி, மளிகை பொருட்கள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்