தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
வேதாரண்யத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தீயணைப்பு நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமையில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. அகஸ்தியன்பள்ளி, கருப்பம்புலம் அரசு ஆஸ்பத்திரிகளும், வேதாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் வேதாரண்யம் கோவில் செயல் அலுவலர் அறிவழகன், கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் நிலவழகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.