காரியாபட்டி,
தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தின் சார்பாக தீ விபத்து குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரியாபட்டியில் உள்ள பள்ளிகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையம், முக்கிய வீதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிற்சாலை, கிராம பகுதிகளில் உள்ள மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தீ தொண்டு வாரவிழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.