மாப்பிள்ளையூரணி பூங்காவில் தீவிபத்து

தூ்துக்குடி மாப்பிள்ளையூரணி பூங்காவில் தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2023-09-14 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் நட்டார் ஆனந்தி மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்