ரெயில் பயணிகளுக்கு தீவிபத்து குறித்து விழிப்புணர்வு

ரெயில் பயணிகளுக்கு தீவிபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-10-20 17:56 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு ரெயில் மற்றும் பஸ்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதித்துள்ளது. இந்தநிலையில் அரக்கோணம் ரெயில்நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் இணைந்து ரெயில் பயணிகளுக்கான விழிப்புணர்வை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப் ஆகியோர் தலைமையில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பு செழியன், சரவணன் மற்றும் போலீசார் பிளாட்பாரத்திலும், அரக்கோணம் வழியாக வந்து செல்லும் ரெயில்களின் பெட்டிகளில் ஏறி பயணிகளிடமும், ரெயிலில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்றும், விபத்து இல்லாமல் பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்