தொழிலாளி வீட்டில் தீ விபத்து

அல்லிநகரத்தில் தொழிலாளி வீட்டில் தீடீரென்று தீப்பிடித்தது.

Update: 2023-02-02 18:45 GMT

தேனி அல்லிநகரம் மச்சால் 2-வது தெருவில் வசிப்பவர் அழகர்சாமி (வயது 44). இவருடைய மனைவி சிவராணி (42). இவர்கள் இருவரும் ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். பிற்பகலில் இவருடைய வீட்டில் இருந்து புகைமூட்டமாக வெளியேறியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் புகைமூட்டம் ஏற்பட்டது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. சமையல் அறையின் சுவர், அங்கிருந்த பொருட்களும் சேதமாகின. மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்