ரேஷன் கடையில் தீ; 2 ஆயிரம் சாக்குகள் எரிந்து சாம்பல்
பட்டுக்கோட்டை அருகே ரேஷன் கடையில் தீப்பிடித்து 2 ஆயிரம் காலி சாக்குகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
பட்டுக்கோட்டை அருகே ரேஷன் கடையில் தீப்பிடித்து 2 ஆயிரம் காலி சாக்குகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
ரேஷன் கடையில் தீ
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி ரைஸ்மில் நிறுத்தம் அருகே ரேஷன் கடை உள்ளது. நேற்று முன் தினம் மாலை 6 மணி அளவில் ரேஷன் கடையில் திடீர் என்று தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இதனால் அங்கு உள்ள உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
2 ஆயிரம் சாக்குகள்
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 2 ஆயிரம் காலி சாக்குகள் தீயில் எரிந்து சாம்பல் ஆயின.