பருப்பு மில்லில் தீ விபத்து

பருப்பு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-09-01 21:48 GMT

விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர்.நகரில் ஜெய்சங்கர் (வயது 34) என்பவருக்கு சொந்தமான பருப்பு மில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பருப்பு மூடைகள் மற்றும் எந்திரங்கள் தீயில் சேதமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்