அரவை மில்லில் தீ விபத்து
சிவகாசியில் அரவை மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.;
சிவகாசி,
சிவகாசி நாரணாபுரம் ரோட்டில் உள்ள போஸ் காலனியில் ஒரு அட்டை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த மில்லின் ஒரு பகுதியில் அரவை மில் இயங்கி வந்துள்ளது. இதில் பட்டாசுக்கு பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் அரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அரவை மில்லில் இருந்த வேதிப்பொருட்கள் உராய்வு காரணமாக தீப்பற்றி எரிந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் மணலை கொண்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அரவை மில் நடத்த உரிய அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.