கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2022-06-30 17:04 GMT

நாட்டறம்பள்ளி அருகே மல்லப்பள்ளி கீழ்பணம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அதேப் பகுதியில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். தொழிற்சாலைக்கு வெளியே நார்களை காய வைத்து உள்ளனர். அப்போது வெளியே காய வைத்திருந்த நார் திடிரென தீப்பற்றி எரிந்தது. உடனே தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளிகள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்