பெண்ணாடம் அருகே பரபரப்பு தொழிலாளி வீட்டில் தீ விபத்து காரணம் என்ன? போலீஸ் விசாரணை

பெண்ணாடம் அருகே தொழிலாளி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் விசாாித்து வருகின்றனா்.

Update: 2022-12-10 18:45 GMT


பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த துறையூரை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் சேகர் (வயது 32). தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவரது கூரை வீடு திடீரென தீ பற்றி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த, திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டின் பெரும்பகுதி எரிந்து சேதமானது. ஏற்கனவே இந்த கிராமத்தில் கடந்த 5-ந்தேதி இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தான், சேகரின் வீடு தீ பற்றி எரிந்துள்ளது. எனவே இதன்பின்னால் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்கிற கோணத்தில் பெண்ணாடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தீ விபத்து நடந்த வீட்டுக்கு தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து தடயங்களை சேகரித்தனர். இந்த தீ விபத்து காரணமாக, துறையூர் கிராமத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்