சென்னை நோக்கி சென்ற நவஜீவன் ரெயிலில் தீ விபத்து - பயணிகள் அச்சம்
சென்னை நோக்கி சென்ற நவஜீவன் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் சந்திப்பு அருகே சென்னை நோக்கி சென்ற நவஜீவன் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
குஜராத்தின் அகமதாபத்தில் இருந்து சென்னைக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் அதிகாலை 2.45 மணியளவில் ஆந்திர மாநிலம் குண்டுர் ரயில் நிலையம் அருகே வந்த போது தீடிரென தீ விபத்து ஏற்பட்டது.
ரெயிலின் பண்ட்ரி கார் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்ததும் ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரெயிலில் இருந்த தானியங்கி தீ கட்டுப்பாடு மூலம் தீ அணைக்கப்பட்டதாக தெரிகிறது.
பெட்டிக்குள் இருந்த புகை வெளியேறுவதற்காக ரெயிலின் மூன்று கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த தீ விபத்து காரணமாக குண்டுர் ரயில் நிலையத்தில் ரயில் 82 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அதன் பிறகு தனது பயணத்தை தொடர்ந்தது..