வாழைத்தோட்டத்தில் தீ விபத்து

செய்துங்கநல்லூரில் வாழைத்தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-08-07 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

செய்துங்கநல்லூர் சிவன் கோவிலுக்கு கீழ்பகுதியில் 300 ஏக்கரில் விவசாயிகள் வாழை தோட்டங்கள் அமைத்துள்ளனர். இதில் பெரும்பாலான வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் ஒரு வாழைத்தோட்டத்தில் நேற்று திடீரென தீ பிடித்துள்ளது. அப்பகுதியில் பலத்த காற்றுவீசியதால், தீ பக்கத்திலுள்ள தோட்டங்களுக்கும் பரவி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறையினர் அப்பகுதிக்கு வந்து தீயை அணைத்தனர். இதில் ஏராளமான வாழைகள் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்