குறிச்சி குளக்கரையில் தீ விபத்து
விராலிமலை அருகே குறிச்சி குளக்கரையில் தீ விபத்து ஏற்பட்டது.
விராலிமலை அருகே மாதிரிப்பட்டி பகுதியில் உள்ள குறிச்சி குளத்தில் பல ஏக்கரில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இந்தநிலையில் நேற்று அந்த குளக்கரையின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிவதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையில் தீயானது மள மளவென மற்ற இடங்களுக்கும் பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை சுமார் 1 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். திடீரென பற்றி எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் புகை மண்டலமாக காணப்பட்டது.