தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோட்டில் டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வங்கியில் உள்ள முக்கிய அறையான லாக்கர் ரூமில் இருந்த குளிர்பதன பெட்டி பயங்கரமான சத்தத்துடன் வெடித்தது. இதனால் வங்கி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து வங்கி ஊழியர்கள் பதறி அடித்து கொண்டு வங்கியை விட்டு வெளியேறினர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் லாக்கரில் இருந்த ஆவணங்கள், நகைள் சேதமடையவில்லை. வெளியில் இருந்த ஒரு சில ஆவணங்கள் மட்டும் சேதமானது.