உதிரிபாகங்கள் கடையில் தீ விபத்து

உதிரிபாகங்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-02-12 18:45 GMT

காளையார்கோவில், 

காளையார்கோவில் ஜெயம் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). இவர் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார்கோவில் பஸ் நிலையம் அருகில் கியாஸ் அடுப்பு மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் அதிகாலையில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் உள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சிவகங்கை தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்