ஓசூரில்ஐஸ்கிரீம் குடோனில் திடீர் தீ விபத்து
ஓசூரில் ஐஸ்கிரீம் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;
ஓசூர்
ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோ பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது65). இவர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் ஐஸ்கிரீம் குடோன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, தொழிலாளர்கள் பணி முடித்து, கடையின் கதவை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை திடீரென அந்த குடோனில் இருந்து புகை கசிந்தது. இதுகுறித்து, அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்திக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீவிபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.