பஞ்சு மில்லில் தீ விபத்து
காங்கயம் அருகே பஞ்சு அரைக்கும் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
காங்கயம் அருகே பஞ்சு அரைக்கும் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
பஞ்சு அரைக்கும் மில்
காங்கயம், கோவை சாலையில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு அரைக்கும் மில் உள்ளது. இந்த மில்லில் உள்ள பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் நேற்று காலை ஏற்பட்ட மின்சார பழுது காரணமாக தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்த தீ மளமள வென்று மில்முழுவதும் பரவியது. அப்போது அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
நேரம் செல்ல செல்ல தீயின் வேகம் அதிகரித்தது. இதையடுத்து காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ முழுவதும் அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எந்திரங்கள் சேதம்
இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் பஞ்சு அரைக்கும் எந்திரங்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.