காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்தது

Update: 2023-04-20 15:33 GMT


உடுமலைப்பகுதியில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வயல்வெளிகள் சாலையின் ஓரங்களில் உள்ள புற்கள், செடிகள் காய்ந்து வருகின்றது. இந்த சூழலில் உடுமலை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ராகல்பாவி பிரிவுக்கு அருகே பெட்ரோல் பங்கை ஒட்டியவாறு முளைத்திருந்த புற்களில் நேற்று திடீரென தீப்பற்றிக்கொண்டது.

இது குறித்த தகவல் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சாலையின் ஓரத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் நெடுஞ்சாலையின் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. வாகன ஓட்டிகள் ஒரு சிலர் புகைப்பிடித்தவாறு செல்கின்றனர்.

அப்போது பீடி, சிகரெட் தீயை அணைக்காமல் வீசி செல்வதும் வழக்கமாக உள்ளது.இதன் காரணமாக எளிதில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் சாலையில் ஓரத்தில் உள்ள மரங்களும் கருகும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பீட,சிகரெட் உள்ளிட்டவற்றை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உடுமலை நகராட்சி உட்பட்ட அருண்மொழி சந்தில் நாய் ஒன்று கம்பியில் சிக்கி குட்டிகளுடன் அவதிப்பட்டு வந்தது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் தீயணைப்பு துறையினர் சென்று நாயையும், அதன் குட்டிகளையும் பத்திரமாக மீட்டனர்.

மேலும் செய்திகள்