தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்துரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

உடுமலை அருகே உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2023-02-16 16:53 GMT

உடுமலை அருகே உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தீ விபத்து

உடுமலையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் கோபால்சாமி (வயது 47). இதுபோல் ஆறுமுகம் மகன் ராஜ்குமார் (37). இவர்களுக்கு உடுமலையை அடுத்த மைவாடி பகுதியில் சொந்தமாக தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இந்த தென்னைநார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று மதியம் இந்த தொழிற்சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் மற்றும் தேங்காய் மட்டைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக பணியில் இருந்த தொழிலாளர்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், காற்று வேகமாக வீசியதாலும் தீ மளமளவென்று பெரிய அளவில் பரவியது.

தென்னை நார் பண்டல்களில் பரவியது

இதனையடுத்து உடுமலை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்ன் பேரில் தீயணைப்பு துறையினர். உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் முழுவீச்சுடன் ஈடுபட்டனர். இதற்கிடையில் காற்று அதிகமாக வீசியதால் அருகிலிருந்த கொட்டகையில் இருப்பு வைத்திருந்த தென்னை நார் பண்டல்களிலும் தீ பரவி முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததாலும், புகை மூட்டம் அதிக அளவில் இருந்ததாலும் அருகில் நெருங்க முடியாத சூழ்நிலை இருந்தது.

அதற்குள் அக்கம்பக்கத்திலிருந்த தென்னை நார்த்தொழிற்சாலைகளிலிருந்து தண்ணீர் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். இதனையடுத்து பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ரூ.1½ கோடி பொருட்கள் நாசம்

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான தென்னை நார்ப்பொருட்கள், மோட்டார்கள் மற்றும் கொட்டகை ஆகியவை எரிந்து நாசமானது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மடத்துக்குளம் தாசில்தார் செல்வி, வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர் ஆகியோர் இந்த தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை நீண்டதொலைவு வரை பரவியது. இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்