காட்டுப்பகுதியில் தீ

Update: 2023-02-14 17:01 GMT


காங்கயம் அடுத்த சிவன்மலை அருகே காட்டுப்பகுதியில் நேற்று மதியம் தீப் பிடித்தது. பின்னர் மளமளவென பரவி அப்பகுதியை சுற்றிலும் உள்ள பகுதிகளில் பரவியது. இதை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 தகவல் அறிந்த காங்கயம் தீயணைப்பு நிலைய அதிகாரி மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்