பவானி அருகே திருவிழாவில் வைத்த பட்டாசு விழுந்ததில் கரும்பு தோட்டம் தீப்பிடித்தது- 3 ஏக்கர் பயிர் நாசம்

பவானி அருகே திருவிழாவில் வைத்த பட்டாசு விழுந்ததில் கரும்பு தோட்டம் தீப்பிடித்தது. 3 ஏக்கர் பயிர் நாசமடைந்தது.

Update: 2023-02-05 21:18 GMT

பவானி

பவானி அருகே திருவிழாவில் வைத்த பட்டாசு விழுந்ததில் கரும்பு தோட்டம் தீப்பிடித்தது. 3 ஏக்கர் பயிர் நாசமடைந்தது.

திருவிழா

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி நடுவளவு பகுதியைச் சேர்ந்தவர் காளியண்ணன். விவசாயி. இவரது வீட்டையொட்டி அவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அவர் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். கரும்பு நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி சாமி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

கரும்பு பயிர் நாசம்

அப்போது பக்தர்கள் சிலர் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் பட்டாசில் உள்ள தீப்பொறி பறந்து சென்று அருகே இருந்த காளியண்ணனின் கரும்பு தோட்டத்துக்குள் விழுந்தது. இதனால் கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. கரும்பு நன்கு விளைந்து தோகை காய்ந்திருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு் எரிந்தது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து இதுபற்றி பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 3 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் எரிந்து நாசம் ஆனது.

Tags:    

மேலும் செய்திகள்