பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையத்தில், செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இங்கு விவசாய நிலத்தில் போடுவதற்காக கழிவுபஞ்சுகள் வாங்கி இருப்பு வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று கழிவுபஞ்சு வைத்திருந்த பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பல்லடம் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அக்கம், பக்கம் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.