தொண்டி,
திருவாடானை தாலுகா பாகனூர் கிராமத்தில் சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் படைப்பில் திடீரென தீப்பிடித்தது. இதனை கண்ட அந்த கிராம மக்கள் தீயை அணைக்க முயன்று உள்ளனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியாமல் போராடினர். இது குறித்து ஊராட்சி தலைவர் பாப்பா ராமநாதன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.